வீடு புகுந்து திருடி வந்த 2 பேர் பிடிபட்டனர்; 12 வழக்குகளில் தொடர்புடையவர்கள்

வீடு புகுந்து திருடி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது 12 வழக்குகள் பதிவாகி உள்ளது தெரியவந்தது.

Update: 2023-08-06 19:15 GMT

தானே, 

வீடு புகுந்து திருடி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது 12 வழக்குகள் பதிவாகி உள்ளது தெரியவந்தது.

வீடு புகுந்து திருட்டு

தானே, நவிமும்பை போன்ற பகுதிகளில் அடிக்கடி வீடு புகுந்து திருட்டு நடந்து வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் படி போலீசார் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்களின் அடையாளம் தெரியவந்ததை தொடர்ந்து ஹைதர் சேக், யூசுப் சேக் ஆகிய 2 பேரை போலீசார் தேடிவந்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் மேற்கு வங்காள மாநிலத்திற்கு தப்பி செல்ல கடந்த 21-ந்தேதி கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

2 பேர் கைது

இதையடுத்து போலீசார் ரெயில்வே போலீசாரின் உதவியுடன் வார்தா ரெயில் நிலையத்தில் வைத்து இருவரையும் பிடித்து கைது செய்தனர். இவர்கள் மீது துர்பே, கோபர்கைர்னே, பன்வெல், ராபலே உள்பட பல போலீஸ் நிலையத்தில் 12 வழக்குகள் பதிவாகி உள்ளது தெரியவந்தது. மேலும் இவர்களிடம் இருந்த ரூ.12 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் உள்பட திருட்டு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்