பத்லாப்பூர் பண்ணை வீட்டில் மின்சாரம் தாக்கி சிறுவன், வாலிபர் பலி

தானே மாவட்டம் பத்லாப்பூரில் உள்ள பண்ணை வீட்டில் தாக்கி சிறுவன் மற்றும் வாலிபர் பலி.

Update: 2023-06-27 19:30 GMT

தானே, 

தானே மாவட்டம் பத்லாப்பூரில் உள்ள பண்ணை வீட்டில் கடந்த 24-ந் தேதி ஜெயேஷ் பெக்கர் (வயது19) என்ற வாலிபர் மற்றும் அவரது உறவினரான சகுமார் (17) ஆகியோர் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த மின்வயர் ஒன்று அறுந்து உலோக கதவில் விழுந்து கிடந்தது. இதனால் கதவில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இதனை அறியாத 2 பேரும் கதவை தொட்ட போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். இதுபற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் 2 பேரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்