10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழர் நிர்வகிக்கும் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்து சாதனை

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழர் நிர்வகிக்கும் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைத்து உள்ளனர்.

Update: 2022-06-17 16:18 GMT

மும்பை, 

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழர் நிர்வகிக்கும் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைத்து உள்ளனர்.

காமராஜர், பிரைட் பள்ளி

மராட்டியத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் மும்பையில் உள்ள தமிழர் நிர்வகிக்கும் பள்ளிகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்து உள்ளனர். தாராவி காமராஜர் பள்ளியில் மாணவி ஆதிலா பயாஸ் அன்சாரி 94.20 சதவீதம் மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்தார். சேக் ஹசினா 91.80 சதவீதம் பெற்று 2-வது இடமும், வன்ஜாரே சித்தி 91.40 சதவீதம் மதிப்பெண் பெற்று 3-வது இடம் பெற்றனர்.

பாண்டுப் பிரைட் பள்ளியில் 97.46 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவி அன்சிகா யாதவ் 91.20 சதவீதம் மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்தார். மாணவி ஸ்ரேயா யாதவ் 90.40 சதவீதம் மதிப்பெண் பெற்று 2-வது இடமும், கவுரவ் ராகேஷ், பைரவி சக்பால் 3-ம் இடம் பிடித்தனர்.

காந்தி நினைவு பள்ளி

மாட்டுங்கா லேபர் கேம்ப் காந்தி நினைவு பள்ளியில் மாணவி சுபியா முசாபர் சேக் 94.80 சதவீதம் மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்தார். அஞ்சலி குப்தா 91.40 சதவீத மதிப்பெண்ணுடன் 2-ம் இடமும், ஆகாஷ் சுப்ரமணியன் 91 சதவீத மதிப்பெண்ணுடன் 3-ம் இடமும் பிடித்தனர்.

பம்பாய் தமிழர் பேரவை கல்வி அறக்கட்டளையின் பீப்ள்ஸ் வெல்பர் பள்ளியில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். இதற்கு உழைத்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் முதல்வருக்கு அறக்கட்டளை தலைவர் மோகன் ராஜ் மற்றும் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தாராவி டாம்பர் காம்பவுண்ட் பகுதியில் உள்ள ராயல் சிட்டி பள்ளியில் மாணவி அபிரேகா நாடார் 90.60 சதவீதம் மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்தார். மாணவன் இர்பான் சேக் முகமது 2-வது இடமும், ராகினி சவுத்ரி 3-வது இடமும் பிடித்தனர்.

தாராவி கம்பன் உயர்நிலைப்பள்ளியில் மாணவி ஜெனிபர் செல்வன் 80 சதவீதம் மதிப்பெண் பெற்று முதல் இடமும், ராஜலெட்சுமி மாரிமுத்து 2-வது இடமும், தமிழ்செல்வி 3-ம் இடமும் பிடித்தனர். அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.

------------------

Tags:    

மேலும் செய்திகள்