பழங்குடியினர் மேம்பாட்டு கழகத்தில் ரூ.16½ கோடி முறைகேடு செய்த அதிகாரிகள் உள்பட 6 பேர் மீது வழக்கு

பழங்குடியினர் மேம்பாட்டு கழகத்தில் ரூ.16.60 கோடி முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-07-26 19:30 GMT

தானே, 

பழங்குடியினர் மேம்பாட்டு கழகத்தில் ரூ.16.60 கோடி முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

விவசாயிகள் புகார்

தானே மாவட்டம் சகாப்பூர் தாலுகாவில் பழங்குடியினர் மேம்பாட்டு கழக நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடந்து வருவதாக விவசாயிகள் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இதில் கடந்த 2022-23-ம் ஆண்டின் காரீப் பருவகாலத்தில் 52 ஆயிரத்து 840 குவிண்டால் தானியங்கள் கொள்முதல் செய்ததாக போலி உறுதிமொழி பத்திரம் தயாரித்து முறைகேடு செய்து இருப்பது தெரியவந்தது.

ரூ.16 கோடி முறைகேடு

இது குறித்து அதிகாரிகள் சகாப்பூர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் நடத்திய விசாரணையில், முறைகேட்டில் 3 அரசு அதிகாரிகள் உள்பட 6 பேர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. மேலும் அரசு மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு கழகத்துக்கு ரூ.16 கோடியே 60 லட்சம் அளவிற்கு இழப்பீடு ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இதன்படி போலீசார் முறைகேட்டில் ஈடுபட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும் வழக்கு தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்