7 எருமை மாடுகளை கொன்ற வாலிபர் கைது- பிவண்டியில் கொடுரம்

பிவண்டியில் 7 எருமை மாடுகளை கொன்று பலிதீர்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-22 12:03 GMT

தானே, 

  தானே மாவட்டம் பிவண்டியில், கடந்த 15-ந் தேதி அங்கிருந்த மாட்டு தொழுவத்தில் அதிகாலை 1.30மணி அளவில் மர்ம ஆசாமி ஒருவர் புகுந்தார். அங்கு கட்டப்பட்டு இருந்த எருமை மாடுகளை கத்தியால் தாக்கி விட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவத்தில் 7 எருமை மாடுகள் பலியானது. இதுபற்றி தகவல் அறிந்த மாட்டு தொழுவத்தின் உரிமையாளர் நிசாம்புரா போலீசில் புகார் அளித்தார்.

  இந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் பைசல் ஹசேன் ரபீக் (வயது 20) என்பவர்தான் மாடுகளை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் இவருக்கும் மாட்டு தொழுவத்தின் உரிமையாளருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக தெரியவந்தது. இதன் காரணமாக மாடுகளை கொன்று பழி தீர்த்ததாக தெரிவித்தார்.

  போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-----

Tags:    

மேலும் செய்திகள்