தகானுவில் லேசான நிலநடுக்கம்

Update: 2022-11-24 18:45 GMT

வசாய், 

பால்கர் மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தகானு, பால்கர், தானுடல்வாடி பகுதியில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதில் தகானு தாலுகா தானுடல்வாடியில் அதிகளவு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை 4.04 மணி அளவில் தகானு கிழக்கில் இருந்து 24 கி.மீ. தொலைவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பற்றி அறிந்த அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 5 கி.மீ ஆழத்தில் 3.6 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதனால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்