மொகரம் ஊர்வலம்- தாராவியில் நாளை மறுநாள் போக்குவரத்தில் மாற்றம்

மொகரம் ஊர்வலம் காரணமாக தாராவியில் நாளை மறுநாள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-08-07 13:28 GMT

மும்பை, 

மொகரம் பண்டிகை நாளை மறுநாள்( செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தாராவியின் பல்வேறு பகுதிகளில் நாளை மறுநாள் இஸ்லாமியர்கள் ஊர்வலம் நடைபெற உள்ளது. குறிப்பாக இந்த ஊர்வலம் தாராவி 60 அடி சாலை, 90 அடி சாலை, மாகிம் சயான் லிங் ரோடு, சந்த் ரோகிதாஸ் ரோடு உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. எனவே நாளை மதியம் 3 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை தாராவியில் பல சாலைகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர் ராஜ் திலக் ரவுசான் கூறுகையில், "மொகரம் ஊர்வலத்தின் போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதை தவிர்க்க போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கேம்கர் சவுக்கில் இருந்து தாராவி டி-ஜங்ஷன் வரையில் வாகனங்கள் திருப்பிவிடப்படும்.

இதேபோல கும்பர்வாடா வழியாக மாட்டுங்காவில் இருந்து வரும் வாகனங்கள் சயான் ஆஸ்பத்திரி-சயான் ஜங்ஷன் வழியாகவும் திருப்பிவிடப்படும்" என்றார்.

மேலும் செய்திகள்