நாந்தெட் மாவட்ட சிவசேனா தலைவா் நீக்கம்- உத்தவ் தாக்கரே நடவடிக்கை

சிவசேனா கட்சியின் நாந்தெட் மாவட்ட தலைவரை உத்தவ் தாக்கரே நீக்கி உள்ளார்.

Update: 2022-08-07 17:45 GMT

மும்பை, 

சிவசேனா கட்சியின் நாந்தெட் மாவட்ட தலைவரை உத்தவ் தாக்கரே நீக்கி உள்ளார்.

மாவட்ட தலைவர் நீக்கம்

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நாளை (திங்கட் கிழமை) நாந்தெட் மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தநிலையில் நாந்தெட் மாவட்ட சிவசேனா தலைவர் பொறுப்பில் இருந்து உமேஷ் முண்டே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து கட்சியின் செயலாளர் விநாயக் ராவத் கூறுகையில், "உமேஷ் முண்டே கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதை அடுத்து அவரை உத்தவ் தாக்கரே பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளார்." என கூறினார்.

கடந்த மாதம் சிவசேனா உடைந்தது. இதில் ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்களை உத்தவ் தாக்கரே கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி வருகிறார். இதன் அடிப்படையில் உமேஷ் முண்டே மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஷிண்டே அணிக்கு தாவல்

இதற்கிடையே லாத்தூர் மாவட்ட முன்னாள் சிவசேனா தலைவர் பல்வந்த் ஜாதவ் ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைந்து உள்ளார். எனினும் அவர் உத்தவ் தாக்கரே மீது மரியாதை இருப்பதாகவும், அவர் மீதான அன்பு எப்போதும் இருக்கும் என கூறினார்.

லாத்தூர் சிவசேனா தலைவர் முன்னாள் எம்.பி. சந்திரகாந்த் கைரே மீதான அதிருப்தி காரணமாக ஷிண்டே அணியில் சேருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்