தொழில் அதிபரிடம் ரூ.96 லட்சம் அபேஸ் - 2 பேர் சிக்கினர்

கடன் தருவதாக கூறி தொழிலதிபரிடம் ரூ.96 லட்சம் அபேஸ் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-23 18:45 GMT

மும்பை, 

கடன் தருவதாக கூறி தொழிலதிபரிடம் ரூ.96 லட்சம் அபேஸ் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரூ.60 கோடி கடன்

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் சல்மான் கான். இவர் தனது தொழிலை விரிவுபடுத்த ரூ.60 கோடி கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்து இருந்தார். இது பற்றி அறிந்த அவரது நண்பர் ரஞ்சித் பாண்டே சார்க்கோப்பில் உள்ள ஷா என்பவர் தனிநபர் கடன் தருவதாக தெரிவித்தார். இதன்படி ஷாவை, சல்மான் கான் தொடர்பு கொள்ள முயன்ற போது சாம் தல்ரேஜா (வயது38), ஹித்தேஷ் புராஷ்மனி (36) ஆகிய 2 பேரின் அறிமுகம் கிடைத்தது.

இவர்கள் மிர்பூரை சேர்ந்த தீபக் சவுதா என்பவரிடம் இருந்து ரூ.60 கோடி வாங்கி தருவதாக கூறி வாக்குறுதி அளித்தனர். முதலில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் செலுத்த வேண்டும் என சல்மான் கானிடம் தெரிவித்தனர். பின்னர் ரிஜிஸ்டர், காப்பீடு திட்டத்தில் பணம் செலுத்த வேண்டும் கூறி ரூ.18 லட்சத்து 70 ஆயிரம் பெற்றனர்.

2 பேர் கைது

இதனை தொடர்ந்து தங்களுக்கு 5 சதவீத கமிஷன் என கூறி இவ்வாறாக ரூ.96 லட்சத்தை சல்மான் கானிடம் இருந்து கறந்தனர். இதன்பிறகு தங்கள் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக 2 பேரும் சேர்ந்து ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு சால்மான் கானை வரவழைத்து தீபக் சவுதாவை சந்திக்க ஏற்பாடு ஏற்பாடு செய்தனர். அவர் சில நாட்களில் பணம் தருவதாக தெரிவித்தனர்.

பின்னர் சில நாட்கள் கழித்து கடன் தர வாய்ப்பு இல்லை கூறி சல்மான் கானின் தொடர்பை துண்டித்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து சாம் தல்ரேஜா, ஹித்தேஷ் புராஷ்மணி ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஷா மற்றும் தீபக் சவுதா ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்