விநாயகர் சதுர்த்தியையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.100-க்கு சிறப்பு தொகுப்பு - மந்திரி சகன் புஜ்பால் அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தியையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.100-க்கு உணவு பொருட்களின் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று மந்திரி சகன் புஜ்பால் அறிவித்தார்.

Update: 2023-09-09 19:30 GMT

மும்பை, 

விநாயகர் சதுர்த்தியையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.100-க்கு உணவு பொருட்களின் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று மந்திரி சகன் புஜ்பால் அறிவித்தார்.

சிறப்பு தொகுப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாநிலம் முழுவதும் ரேஷன் அட்டைதாரரர்களுக்கு உணவு பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக உணவு மற்றும் சிவில் சப்ளை மந்திரி சகன்புஜ்பால் கூறியதாவது:-

ரூ.100 விலையில்...

மாநிலத்தில் உள்ள 7.5 கோடி பயனாளிகளுக்கு தலா ஒரு கிலோ சர்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்டவை சிறப்பு தொகுப்பாக ரூ.100-க்கு வழங்கப்படும். மஞ்சள், ஆரஞ்ச் அட்டைதாரர்களுக்கு இந்த உணவு பொருட்கள் கிடைக்கும். நாசிக் மாவட்டத்தில் மட்டும் சுமார் 7 லட்சத்து 78 ஆயிரம் பயனாளிகள் பயன்அடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்