அண்டார்டிகாவில் உடைந்த 30 கி.மீ. நீள பனிப்பாறை!

அண்டார்டிகாவில் பெரும் பனிப்பாறை ஒன்று உடைந்திருக்கிறது.

Update: 2018-10-27 10:35 GMT
ஸ்டெப் லியர்மெட் என்ற புவியியல் விஞ்ஞானி செயற்கைக்கோள் புகைப்படங்களைத் தொடர்ச்சியாக ஆய்வு செய்துவந்ததன் மூலமாக இதைக் கண்டறிந்திருக்கிறார்.

இந்தப் பனிப்பாறை 30 கி.மீ. நீளமும், பத்து கி.மீ. அகலமும் கொண்டது. இவ்வளவு பெரிய பனிப்பாறை உடைவினால் அண்டார்டிகாவின் கடற்கரைப் பகுதிகளில் அதிக அளவில் பாதிப்புகள் இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கடந்த ஆண்டும் இதே போல ஒரு பனிப்பாறை உடைந்தது. அண்டார்டிகா பகுதியில் இருக்கும் பைன் தீவு பனிப்பிரதேசத்தில்தான் இது போன்ற பாதிப்புகள் அதிகமாக நிகழ்கின்றன.

இந்தப் பகுதியில் மட்டுமே ஓராண்டுக்கு 45 பில்லியன் டன் அளவில் பனி உருகுவதாகக் கண்டறிந்துள்ளனர். இதன் மூலமாக, ஒவ்வொரு எட்டு வருடங்களுக்கும் கடல் மட்டம் 1 செ.மீ. அளவில் உயர்கிறது எனவும், ஒருவேளை இது முழுவதுமாக உருகினால் கடல் நீர்மட்டம் 1.7 அடிக்கு மேல் உயர வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

2001-ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற மிகப் பெரிய பனிப்பாறை உடைவுகளில் ஆறாவதாக சமீபத்திய உடைவு கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்