செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் வங்கி பங்குகள் விலை நிலவரம்

மும்பை பங்குச்சந்தையில், செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் பல வங்கிகளின் பங்கு விலை அதிகரித்தது.

Update: 2019-04-03 05:34 GMT
மும்பை

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் பல வங்கிகளின் பங்கு விலை அதிகரித்தது. அந்த துறைக்கான குறியீட்டு எண் 0.26 சதவீதம் ஏற்றம் கண்டது. வர்த்தகத்தின் இறுதியில் அந்த பங்குகளின் விலை நிலவரம் வருமாறு:-

* இண்டஸ் இந்த் வங்கிப் பங்கு விலை 1.95 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.1,776.45-க்கு கைமாறியது.

* பாரத ஸ்டேட் வங்கிப் பங்கின் விலை 1.78 சதவீதம் முன்னேறி ரூ.328.55-ல் நிலைகொண்டது.

* யெஸ் வங்கிப் பங்கு விலை 1.70 சதவீதம் அதிகரித்து ரூ.280.40-ல் நிலைபெற்றது.

* ஆக்சிஸ் வங்கிப் பங்கின் விலை 0.31 சதவீதம் உயர்ந்து ரூ.767.45-ல் முடிவுற்றது.

* பேங்க் ஆப் பரோடா பங்கின் விலை 0.30 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.133.25-ஆக இருந்தது.

* கோட்டக் மகிந்திரா வங்கிப் பங்கு 0.04 சதவீதம் முன்னேறி ரூ.1,338.80-க்கு விலைபோனது.

அந்த நிலையில் சரிவைச் சந்தித்த வங்கிப் பங்குகள் வருமாறு:-

* சிட்டி யூனியன் பேங்க் பங்கின் விலை 1.91 சதவீதம் சரிவடைந்து ரூ.202.40-ஆக இருந்தது.

* எச்.டீ.எப்.சி. வங்கி பங்கின் விலை 0.59 சதவீதம் குறைந்து ரூ.2,296.50-ல் முடிவுற்றது.

* ஐசிஐசிஐ வங்கிப் பங்கு விலை 0.33 சதவீதம் இறங்கி ரூ.397.45-ல் நிலைபெற்றது.

* பெடரல் வங்கிப் பங்கு 0.31 சதவீதம் முன்னேறி ரூ.97.65-க்கு விலைபோனது.

மேலும் செய்திகள்