நிதிஷ்குமாருக்கு ‘ஜாக்பாட்’ அடிக்குமா?

அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் என்பார்கள்

Update: 2019-05-19 08:43 GMT
 மக்கள் செல்வாக்கு ஒருபுறம் இருக்கட்டும்; நேரம் சாதகமாக அமைந்தால் அரசியலில் யாரும் எந்த பதவிக்கு வரமுடியும் என்பதற்கு காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஏகப்பட்ட உதாரணங்கள் உள்ளன.

பிரதமர் நாற்காலியில் அமர்வோம் என்று ஐ.கே.குஜ்ரால் எப்போதாவது நினைத்துப்பார்த்து இருப்பாரா? ஆனால் அரசியல் சூழ்நிலை அவரை 1997-ல் அதில் அமரவைத்தது.

ஜார்கண்ட் மாநிலத்தில் மதுகோடா என்ற சுயேச்சை எம்.எல்.ஏ. முதல்-மந்திரியானதை, அதிர்ஷ்டம் என்பதை தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும்?

இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் அப்படி ஒரு ‘ஜாக்பாட்’ பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாருக்கு அடிக்க வாய்ப்பு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

ஐக்கிய ஜனதாதள தலைவரான நிதிஷ்குமார், 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததை எதிர்த்து பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து விலகியவர். லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளத்துடன் சேர்ந்து பீகாரில் கூட்டணி ஆட்சி நடத்தி வந்த இவர், லாலுவுடன் உரசல் ஏற்பட்டதால் ராஷ்ட்ரீய ஜனதாதளத்தை கழற்றிவிட்டுவிட்டு பாரதீய ஜனதாவுடன் கைகோர்த்து ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார். அன்று எதிரியாக இருந்த பாரதீய ஜனதா இப்போது அவருக்கு நண்பனாகிவிட்டது.

இந்த தேர்தலில் பாரதீய ஜனதா தனி ‘மெஜாரிட்டி’ இல்லாமல் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழ்நிலை உருவாகி, மோடியை தவிர வேறு யாரையாவது பிரதமராக தேர்ந்தெடுத்தால்தான் ஆதரவு அளிப்போம் என்று கூட்டணி கட்சிகள் அடம்பிடித்தால், நிதிஷ்குமாருக்கு அந்த ‘ஜாக்பாட்’ அடிக்க வாய்ப்பு இருக்கிறது.

மேலும் செய்திகள்