பங்குச்சந்தை துளிகள்

நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள் பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு அடிப்படையில் கொடுக்கப்படுகிறது.

Update: 2019-07-10 08:29 GMT
எனவே, பங்குகளில் முதலீடு செய்வோர் அந்த நேரத்தில் சந்தை நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து தமது சொந்த முடிவுகளின் பேரில் அல்லது தமது முதலீட்டு ஆலோசகரின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும்.

* கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (கன்கார்) நிறுவனப் பங்கு பற்றிய மதிப்பீட்டை எச்.டீ.எப்.சி. செக்யூரிட்டீஸ் நிறுவனம் தொடங்கி உள்ளது. இந்நிறுவனம் இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.670-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில் செவ்வாய்க்கிழமை அன்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை ரூ.548.70-ல் நிலைகொண்டது. முந்தைய நாள் இறுதி நிலவரத்தை காட்டிலும் இது 0.86 சதவீத சரிவாகும்.

* டிரென்ட் நிறுவனப் பங்கை வாங்கலாம் என ஐசிஐசிஐ டைரக்ட் நிறுவனம் கூறுகிறது. இந்நிறுவனம் இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.500-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை ரூ.441.55-ஆக இருந்தது. திங்கள்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 3.36 சதவீத ஏற்றமாகும்.

* ஏ.பி.எல். அப்பல்லோ டியூப்ஸ் நிறுவனப் பங்குகளை வாங்கலாம் என எலாரா கேப்பிட்டல் நிறுவனம் பரிந்துரை செய்கிறது. இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.2,267-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை சந்தையில் செவ்வாய்க்கிழமை அன்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை ரூ.1,587.70-ல் நிலைபெற்றது. முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 1.48 சதவீதம் குறைவாகும்.

* டாரன்ட் பவர் நிறுவனப் பங்குகளில் முதலீட்டை குறைத்துக் கொள்ளலாம் என ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் கூறுகிறது. எனினும், இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் (ரூ.295-ல் இருந்து) ரூ.327-ஆக உயர்த்தி இருக்கிறது. மும்பை சந்தையில், நேற்று இப்பங்கின் விலை ரூ.299-ல் நிலைபெற்றது. கடந்த திங்கள்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 1.74 சதவீதம் உயர்வாகும்.

* இண்டஸ் இந்த் வங்கிப் பங்குகளை வாங்கலாம் என கிரெடிட் சுயூஸி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.1,800-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில் செவ்வாய்க்கிழமை அன்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை ரூ.1,492.40-ஆக இருந்தது. முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 1.11 சதவீதம் அதிகமாகும்.

மேலும் செய்திகள்