ஸ்மார்ட்போன் உருவாக்கும் ஆளுமை மாற்றங்கள்

ஸ்மார்ட்போன்களின் வரவால் நமக்கு நிறைய பலன் கிடைத்திருப்பதைப்போல, அது நமது ஆளுமைத்திறனிலும் நிறைய மாற்றங்களை உருவாக்கி இருப்பது ஆய்வில் தெரியவந்து உள்ளது.

Update: 2019-08-12 10:04 GMT
ஆஸ்திரேலியாவின் ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட அந்த ஆய்வு சொல்லும் சுவாரஸ்யமான உண்மைகள்...

* நட்புறவு பேண விரும்புபவர்கள் நிறைய போன் அழைப்பு செய்து பேசுகிறார்கள். இந்த வகையில் பெண்களே அதிகமான அழைப்புகளை செய்கிறார்களாம்.

* வேலை நாட்களில் மனிதர்களின் இயக்கம் அதிகமாக இருக்கிறது. புதிய பணிகள், புதியவர்களுடனான சந்திப்புகள் எல்லாம் இந்த நாட்களில்தான் நடக்கிறது. ஓய்வு நாளில் புதிய பணிகளை செய்பவர்கள் சொற்பமே. அதாவது அவர்கள் ஓய்வு எடுப்பதைத் தவிர புதிய இயக்கம் எதையும் அந்த நாளில் செய்வதில்லை என்பது நமது செல்போன் இயக்கத்தைக் கொண்டு கணிக்கப்பட்டு இருக்கிறது.

* அடிக்கடி போனைத் தேடுபவர்களாக பெண்கள் உள்ளனர். போனில் என்ன வந்திருக்கிறது என்பதை அடிக்கடி அவர்கள் சரி பார்க்க விரும்புகிறார்கள். இந்தப் பழக்கம் இரவில் தூக்கத்தின் இடையிலும் நடக்கிறது.

* புதுமை எண்ணம் கொண்டவர்கள், தேடல் எண்ணம் கொண்டவர்களுக்கு அதிக அழைப்புகள் வருவதுமில்லை. அவர்கள் நிறைய அழைப்பு செய்வதுமில்லை.

* தினமும் 5 மணி நேரங்களுக்கும் மேலாக போனை பயன்படுத்துபவர்களில் 43 சதவீதம் பேர் உடல் பருமனுக்கு ஆளாகிறார்கள். இவர்களுக்கே இதய பாதிப்பு மற்றும் புற்றுநோய் பாதிப்பு போன்ற இதர நோய்களின் தாக்கம் ஏற்படும் சூழலும் உள்ளது.

மேலும் செய்திகள்