ஆகஸ்டு மாதத்தில் ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் உருக்கு உற்பத்தி 13% சரிவு

ஆகஸ்டு மாதத்தில் ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனத்தின் கச்சா உருக்கு உற்பத்தி 13 சதவீதம் சரிவடைந்துள்ளது.

Update: 2019-09-13 10:00 GMT
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனம், நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (2019 ஏப்ரல்-ஜூன்) ரூ.1,008 கோடி லாபம் ஈட்டி உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 58 சதவீத சரிவாகும்.

ஜூன் காலாண்டில் இந்நிறுவனம் 29.10 லட்சம் டன் அளவிற்கு தகடு போன்ற தட்டை வடிவ உருக்குப் பொருள்களை உற்பத்தி செய்து இருந்தது. இதே காலத்தில் அதன் கம்பிகள் போன்ற நீள்வகை உருக்கு பொருள்கள் உற்பத்தி 12 சதவீதம் அதிகரித்து 10.50 லட்சம் டன்னாக உயர்ந்தது.

கடந்த ஆகஸ்டு மாதத்தில் இந்நிறுவனம் 12.50 லட்சம் டன் கச்சா உருக்கு உற்பத்தி செய்து இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 13 சதவீதம் குறைவாகும். அப்போது உற்பத்தி 14.50 லட்சம் டன்னாக இருந்தது.

இந்நிறுவனத்தின் தகடு போன்ற தட்டை வடிவ உருக்குப் பொருள்கள் உற்பத்தி 13 சதவீதம் குறைந்து 8.51 லட்சம் டன்னாக உள்ளது. கம்பி போன்ற நீள்வகை உருக்குப் பொருள்கள் உற்பத்தி 2.91 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.

மேலும் செய்திகள்