மச்சம் தரும் அச்சம்

உடலில் மச்சங்கள் அமைவது இயற்கையானது.

Update: 2019-11-10 07:18 GMT
ஒரு சிலருக்கு 40 மச்சங்கள் வரை இருக்கும். அப்படி அதிக அளவில் மச்சங்கள் கொண்டிருப்பவர்கள் சற்று கவனிக்க வேண்டும். மச்சங்களில் நமைச்சல், ரத்த கசிவு, வலி ஏற்பட்டாலே தோல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது அவசியம். மச்சங்களில் தென்படும் ஒருசில அறிகுறிகள் சரும புற்றுநோயின் வெளிப்பாடாக இருக்கலாம். அத்தகைய அறிகுறிகள் குறித்து பார்ப்போம்.

உடலில் உள்ள மச்சங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அவற்றுள் பாதிக்கு மேல் ஒன்றொடொன்று பொருந்தாமல் சமச்சீரற்ற தன்மையுடன் இருந்தால் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மச்சங்களின் விளிம்பு அல்லது உள் பகுதியில் கீறலோ, வெடிப்போ ஏற்பட்டாலோ, மங்கலாகவோ, ஒழுங்கற்ற தன்மையுடன் இருந்தாலோ அது புற்று நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

அனைத்து மச்சங்களும் ஒரே நிறத்தில் இருந்தால் பிரச்சினை இல்லை. அப்படி இல்லாமல் பழுப்பு, கருப்பு, நீலம், வெள்ளை, சிவப்பு போன்ற நிறங்களில் தென்பட்டால் அதையும் உடனடியாக கவனிக்க வேண்டும்.

மச்சங்களின் அளவு அதிகரித்துக்கொண்டிருந்தால் உடனே மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவதும் அவசியம்.

மேலும் செய்திகள்