அசோக் லேலண்டு வாகனங்கள் விற்பனை 22 சதவீதம் சரிவு

அசோக் லேலண்டு நிறுவனம், நவம்பர் மாதத்தில் மொத்தம் 10,175 வர்த்தக வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 13,119-ஆக இருந்தது. ஆக, விற்பனை 22 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதில் நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்கள் விற்பனை 32 சதவீதம் சரிவடைந்து 5,966-ஆக உள்ளது.

Update: 2019-12-04 08:02 GMT
இலகுரக வர்த்தக வாகனங்கள் விற்பனை 4 சதவீதம் குறைந்து 4,209-ஆக இருக்கிறது. உள்நாட்டு விற்பனை 25 சதவீதம் சரிந்து 9,377 வாகனங்களாக உள்ளது.

அசோக் லேலண்டு நிறுவனம், செப்டம்பர் மாதத்துடன் நிறை வடைந்த காலாண்டில் ரூ.39 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.528 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 93 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 48 சதவீதம் குறைந்து ரூ.3,929 கோடியாக இருக்கிறது. மொத்த லாபம் 72 சதவீதம் சரிவடைந்து ரூ.229 கோடி யாக உள்ளது.

மும்பை பங்குச்சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது அசோக் லேலண்டு நிறுவனப் பங்கு ரூ.80.10-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே குறைந்தபட்சமாக ரூ.77.10-க்கு சென்ற இப்பங்கு இறுதியில் இப்பங்கு ரூ.77.65-ல் நிலை கொண்டது. இது, முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 2.45 சதவீத சரிவாகும்.

மேலும் செய்திகள்