உலக அளவில், நடப்பு ஆண்டில் விமானச் சேவை நிறுவனங்களின் லாபம் 2,590 கோடி டாலராக குறையும்; ஐ.ஏ.டி.ஏ. அமைப்பு மறுமதிப்பீடு

உலக அளவில், நடப்பு ஆண்டில் (2019) விமானச் சேவை நிறுவனங்களின் லாபம் 2,590 கோடி டாலராக குறையும் என சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (ஐ.ஏ.டி.ஏ) மறுமதிப்பீடு செய்துள்ளது.

Update: 2019-12-12 10:12 GMT
290 நிறுவனங்கள்

ஐ.ஏ.டி.ஏ. கூட்டமைப்பில் மொத்தம் 290 விமானச் சேவை நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்கின்றன. நடப்பு ஆண்டில் இந்த நிறுவனங்கள் ஒட்டுமொத்த அளவில் ஈட்டும் நிகர லாபம் 2,800 கோடி டாலராக இருக்கும் என இந்த அமைப்பு கடந்த ஜூன் மாதத்தில் மதிப்பீடு செய்து இருந்தது. அதன் முந்தைய மதிப்பீட்டை விட அது குறைவாகவே இருந்தது. இப்போது மேலும் குறைத்து லாபம் 2,590 கோடி டாலர் அளவிற்கே இருக்கும் என தெரிவித்து இருக்கிறது.

எனினும் எதிர்வரும் 2020-ஆம் ஆண்டில் விமானச் சேவை நிறுவனங்களின் நிகர லாபம் 2,930 கோடி டாலராக உயரும் என ஐ.ஏ.டி.ஏ. முன்னறிவிப்பு செய்துள்ளது. கடந்த 2018-ஆம் அண்டில் இத்துறை ஈட்டிய லாபம் 2,730 கோடி டாலராக இருந்தது.

இந்தியாவில், 2018 காலண்டர் ஆண்டில் உள்நாட்டு விமான சேவையை மொத்தம் 13.89 கோடி பயணிகள் பயன்படுத்தி இருக்கின்றனர். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 18.6 சதவீத வளர்ச்சியாகும்.

அமெரிக்கா முதலிடம்

சர்வதேச அளவில், சுற்றுலா நடவடிக்கைகளின் வாயிலாக அதிக வருவாய் ஈட்டுவதில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டு பயணிகளை ஈர்ப்பதில் அந்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

மேலும் செய்திகள்