வானவில் : ஹோண்டா சி.பி.ஆர் 150.ஆர்

ஹோண்டா நிறுவனம் தனது சி.பி.ஆர் 150.ஆர் மாடல் மோட்டார் சைக்கிளை இந்தோனேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. இரட்டை முகப்பு விளக்கு, எல்.இ.டி. இன்டிகேட்டர், உறுதியான தோற்றப் பொலிவு, இரட்டை வண்ணம் ஆகிய அனைத்து அம்சங்களோடு இது அறிமுகமாகியுள்ளது.

Update: 2020-01-22 10:16 GMT
பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்தமட்டில் ஏ.பி.எஸ். மற்றும் இ.எஸ்.எஸ். வசதி கொண்டது. இதில் 149.16 சி.சி. திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின், 4 வால்வுகள் உள்ளன. டி.ஓ.ஹெச்சி. மோட்டார் உள்ள இதில் 6 கியர்களும் உள்ளன.

இது 9 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் 17.1 பி.எஸ். திறனை வெளிப்படுத்தும். அத்துடன் 7 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் 14.4 நியூட்டன் மீட்டர் டார்க் திறனை வெளிப்படுத்தும். இதன் விலை சுமார் ரூ.1.80 லட்சம் முதல் ரூ.2.05 லட்சம் வரையாக உள்ளது.

இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் சி.பி.ஆர் 150 மாடலை அறிமுகப்படுத்தியபோது அதற்கு பெருமளவு வரவேற்பு இல்லை. ஆனால் தற்போது யமஹா மோட்டார் சைக்கிள் வந்த பிறகு அதற்கு பெருமளவு வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் இதை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து ஹோண்டா தீவிரமாக பரிசீலித்து வருகிறது. முந்தைய மோட்டார் சைக்கிளை வாங்காமல் தவற விட்ட இளைஞர்களுக்காக மீண்டும் ஹோண்டா சி.பி.ஆர்150.ஆர் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் செய்திகள்