கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை மாதவரத்தில் செயல்படுகிறது.

Update: 2020-02-17 07:12 GMT
தற்போது இந்த பல்கலைக்கழகத்தில் பார்ம் மேனேஜர், ஜூனியர் என்ஜினீயர், அசிஸ்டன்ட் டிராப்ட்ஸ்மேன், பைண்டர், பாய்லர், கார்பெண்டர், டிரைவர், எலக்ட்ரீசியன், ஹைடென்சன் ஆபரேட்டர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ஸ்டெனோ டைப்பிஸ்ட், டெக்னீசியன், வயர்மேன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 67 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு பணிக்கும் உள்ள காலியிட விவரத்தை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.

பி.எஸ்சி. அக்ரிகல்சர், ஹார்ட்டிகல்சர், ஹோம்சயின்ஸ், டிப்ளமோ சிவில், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், ஐ.டி.ஐ. படித்தவர்கள் ஆகியோருக்கு பணியிடங்கள் உள்ளன. 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கும், டிரைவர், பைண்டர் போன்ற பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.

அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பம் சமர்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.250 செலுத்தினால் போதுமானது.

குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பங்களை நிரப்பி, தேவையான சான்றுகள் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் சென்றடைய கடைசிநாள் பிப்ரவரி 27-ந்தேதியாகும்.

இது பற்றிய விவரங்களை www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்