முதல் 10 மாதங்களில் காய்கறி, பழங்கள் ஏற்றுமதி 8 சதவீதம் குறைந்தது

நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் (2019 ஏப்ரல்-2020 ஜனவரி) காய்கறி, பழங்கள் ஏற்றுமதி 8 சதவீதம் குறைந்து இருக்கிறது.

Update: 2020-02-26 10:19 GMT
புதுடெல்லி

நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் (2019 ஏப்ரல்-2020 ஜனவரி) காய்கறி, பழங்கள் ஏற்றுமதி 8 சதவீதம் குறைந்து இருக்கிறது.

ஜனவரி வரையிலான 10 மாதங்களில் 177 கோடி டாலருக்கு காய்கறி மற்றும் பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 193 கோடி டாலராக இருந்தது. ஆக, டாலர் மதிப்பில் ஏற்றுமதி 8 சதவீதம் குறைந்துள்ளது. இதே காலத்தில் ரூபாய் மதிப்பு அடிப்படையில் காய்கறி, பழங்கள் ஏற்றுமதி 7.2 சதவீதம் சரிவடைந்து ரூ.12,534 கோடியாக இருக்கிறது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.13,516 கோடியாக இருந்தது.

2019 ஏப்ரல்-ஜனவரி மாத காலத்தில் காய்கறி, பழங்கள் இறக்குமதி 186 கோடி டாலராக உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 182 கோடி டாலராக இருந்தது. ஆக, இறக்குமதி ஏறக்குறைய 2 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஜனவரி மாதத்தில் காய்கறி, பழங்கள் இறக்குமதி 28 கோடி டாலராக உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 20 கோடி டாலராக இருந்தது.

வேளாண் அமைச்சகத்தின் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி கடந்த 2018-19 பருவத்தில் (ஜூலை-ஜூன்) காய்கறி, பழங்கள் உற்பத்தி (31.17 கோடி டன்னில் இருந்து) 31.39 கோடி டன்னாக உயர்ந்து இருக்கிறது. அதில், பழங்கள் உற்பத்தி (9.74 கோடி டன்னில் இருந்து) 9.86 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மேலும் செய்திகள்