2019 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் அதானி பவர் இழப்பு ரூ.703 கோடி

மும்பை சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது அதானி பவர் நிறுவனப் பங்கு ரூ.55.55-க்கு கைமாறியது.

Update: 2020-02-27 11:24 GMT
மும்பை

அதானி பவர் நிறுவனம், 2019 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில், ரூ.703 கோடியை நிகர இழப்பாக கண்டுள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அதன் இழப்பு ரூ.1,180 கோடியாக இருந்தது. ஆக, இழப்பு கணிசமாக குறைந்து இருக்கிறது.

இதே காலத்தில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 0.26 சதவீதம் அதிகரித்து ரூ.6,685 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.6,667 கோடியாக இருந்தது.

மும்பை சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது அதானி பவர் நிறுவனப் பங்கு ரூ.55.55-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.56-க்கும், குறைந்தபட்சமாக ரூ.53.85-க்கும் சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.54.55-ல் நிலைகொண்டது. இது, செவ்வாய்க்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 2.59 சதவீத சரிவாகும்.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மேலும் செய்திகள்