தினம் ஒரு தகவல் : சிங்கினி கார் நெல் ரகம்

தண்ணீர் தேங்குவது, மழை போன்ற இயற்கை சீற்றங்களை தாங்கி வளரும் வல்லமை கொண்டது, சிங்கினி கார் நெல் ரகம். இது நடுத்தர நெல் ரகம்.

Update: 2020-07-14 06:36 GMT
சிவப்பு நெல், சிவப்பு அரிசியையும் கொண்டது. களை அதிகமாக உள்ள நிலத்திலும் சாகுபடி செய்ய ஏற்றது. இந்த நெல் ரகம் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

இந்த நெல் சாகுபடியில் அறுவடைக்குப்பின் வைக்கோலின் பெரும்பகுதி அழுகி நிலத்தில் மக்குவதால் மண்ணின் சத்து கூடுகிறது. இந்த சத்தையே உணவாக எடுத்துக்கொண்டு வளரும் தன்மை இயற்கையாகவே இந்த ரகத்துக்கு உண்டு.

நிலத்தில் மக்கும் பொருட்களால் மண்ணில் உண்டாகும் நுண்ணுயிர்களை சத்துகளாக எடுத்துக்கொண்டு, இடுபொருள் செலவு தேவைப்படாமல் சாகுபடி செய்யக்கூடிய நெல் ரகம் சிங்கினி கார் ஆகும். அந்த வகையில் இது அதிக செலவில்லாத ரகமும் கூட. அவல், பொரிக்கும் ஏற்றது. நோயாளிகளுக்கு இந்த அரிசியில் கஞ்சி வைத்தும் கொடுக்கலாம்.

மேலும் செய்திகள்