சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு

சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2024-05-06 03:28 GMT

சென்னை,

பிரபல யூடியூப்பரான சவுக்கு சங்கர் சமீபத்தில் ஒரு யுடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இருந்தார். அதில் போலீஸ் அதிகாரிகள் குறித்தும், பெண் போலீசார் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார். இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேனியில் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்தனர். அவரை கோவை அழைத்து வந்து 1-வது ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அவரை வருகிற 17-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். கோவை சிறைக்கு கொண்டு செல்லும்போது சவுக்கு சங்கர் கோஷமிட்டபடியே போலீஸ் வேனில் சென்றார். பின்னர் நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சவுக்கு சங்கரின் ஆட்சேபகரமான கருத்துக்கள் அடங்கிய பேட்டி தொடர்பான வீடியோவை வெளியிட்ட தனியார் யூடியூப் சேனல் மீதும் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2-வது குற்றவாளியாக சேனலை சேர்த்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்