மும்பை தாக்குதலுக்கு உதவிய 11 பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருப்பதை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டது

மும்பையில் தாக்குதலுக்கு உதவிய 11 பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருப்பதை பாகிஸ்தானின் உயர்மட்ட விசாரணை ஆணையம் ஏற்றுக்கொண்டு உள்ளது.

Update: 2020-11-11 11:51 GMT
புதுடெல்லி: 

மும்பையில் பயங்கரவாத தாக்குதலுக்கு உதவிய 11 பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருப்பதை பாகிஸ்தானின் உயர்மட்ட விசாரணை ஆணையம் - மத்திய புலனாய்வு அமைப்பு (எப்ஐஏ) ஏற்றுக்கொண்டு உள்ளது.

மும்பையில்  கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ந்தேதி கடல் மார்க்கமாக நுழைந்த பாகிஸ்தானை சேர்ந்த 10 பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர்.  இதில் போலீசார், பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் பலியானார்கள். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் தவிர மற்ற 9 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிப்பட்ட பயங்கரவாதியான, பாகிஸ்தானின் பரீத்கோட் நகரை சேர்ந்த அஜ்மல் அமீர் கசாப் கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் 21ந்தேதி தூக்கிலிடப்பட்டான்.

தற்போது பாகிஸ்தான்  1,210 தேடப்படும் பயங்கரவாதிகள் குறித்து  ஒரு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 880 பக்கங்கள் கொண்ட நீண்ட பட்டியலாக உள்ளது.

2008 பயங்கரவாத தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட அல்பவுஸ் படகு வாங்குவதில் ஈடுபட்டிருந்த முல்தானின் முஹம்மது அம்ஜத் கான் உள்பட 1210 பேர் இடம்பெற்று உள்ளனர்.

அம்ஜத் ஒரு யமஹா மோட்டோர் படகு இயந்திரம், லைப் ஜாக்கெட்டுகள், கராச்சியிலிருந்து  படகுகள் ஆகியவற்றை வாங்கினார், பின்னர் இந்தியாவின் மும்பை  மீதான தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டார்.

பயங்கரவாதிகள் பயன்படுத்திய அல்-ஹுசைனி மற்றும் அல்பவுஸ் படகின் கேப்டனாக இருந்த பஹவல்பூரைச் சேர்ந்த ஷாஹித் கபூர் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மும்பை பயங்கரவாத தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட படகுகளில் வந்த  9 பணியாளர்களையும் இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாஹிவால் மாவட்டத்தைச் சேர்ந்த முஹம்மது உஸ்மான், லாகூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதீக்-உர்-ரெஹ்மான், ஹபீசாபாத்தைச் சேர்ந்த ரியாஸ் அகமது, குஜ்ரான்வாலா மாவட்டத்தைச் சேர்ந்த முகமது முஷ்தாக், தேரா காசி கான் மாவட்டத்தைச் சேர்ந்த முஹம்மது நயீம், சர்கோதா மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ஷகூர், முஹம்மது சபீர் லோத்ரான் மாவட்டம், ரஹீம் யார்கான் மாவட்டத்தைச் சேர்ந்த ஷாகில் அகமது ஆகியோர் அடங்குவர் இவர்கள் அனைவரும் ஐ.நா. பட்டியலிடப்பட்ட பயங்கரவாதக் குழுவில் உள்ளனர். இவர்கள் லஷ்கர் இ தொய்பா உறுப்பினர்களாவார்கள்.

இந்த பட்டியலில் நாட்டில் 1,210 உயர் மற்றும் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகள் உள்ளனர். இருப்பினும், இந்த பட்டியல் ஹபீஸ் சயீத், மசூத் அசார் அல்லது தாவூத் இப்ராஹிம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

தாவூத் இப்ராஹிம் விஷயத்தில், அவர் நாட்டில் இருப்பதை பாகிஸ்தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அவர் கராச்சியில் தங்கியிருப்பது அனைவரும் அறிந்ததே. உண்மையில், அவர் ஐ.நா. பட்டியலிடப்பட்ட பயங்கரவாதியாக இருப்பதால், அவரது முகவரி தெற்கு சிந்து மாகாணத்தின் மாகாண தலைநகரான கராச்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் பலுசிஸ்தானில்  161 பயங்கரவாதிகள், கைபர் பக்துன்க்வாவைச் சேர்ந்த 737 பேர், சிந்துவிலிருந்து 100 பேர், பஞ்சாபிலிருந்து 122 பேர், இஸ்லாமாபாத்தைச் சேர்ந்தவர்கள் 32 பேர், பாககிஸ்தானிய ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த 30 பேர் உள்ளனர்.

இந்த பட்டியலில், இப்போது லண்டனில் வசிக்கும் முத்தாஹிதா கவுமி இயக்கத்தின் (எம்.க்யூ.எம்) தலைவர், பாகிஸ்தான் எதிர்க்கட்சி பி.எம்.எல்.என் தலைவர் நசீர் பட் மற்றும் பாகிஸ்தான் வ் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் மற்றும் முன்னாள் பிரதமர் ஷவுகத் அஜீஸ் ஆகியோரின் பெயரை குறிப்பிடுகிறது.

மேலும் செய்திகள்