சவுண்ட்கோர் புளூடூத் ஸ்பீக்கர்

ஆங்கர் நிறுவனத்தின் துணை நிறுவனமான சவுண்ட்கோர் நிறுவனம் வீட்டில் நடைபெறும் சிறிய நிகழ்ச்சிகளில் இனிய இசையைக் கேட்டு மகிழ உதவும் வகையிலான ஸ்பீக்கர்களைத் தயாரித்துள்ளது.

Update: 2021-03-01 16:24 GMT
இது 160 வாட் திறன் கொண்ட இசையை வெளிப்படுத்தும். இது தண்ணீர் எளிதில் புகாத வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும் எல்.இ.டி. விளக்குகளும் இதில் இடம் பெற்றுள்ளன. மேலும் நீண்ட நேரம் செயல்படும் வகையிலான பேட்டரி உள்ளது இதன் சிறப்பம்சமாகும். இதனுள் 5.25 அங்குள்ள சப்ஊபர் மற்றும் 2 அங்குல அளவிலான இரண்டு டுவீட்டர்களும் உள்ளன. இது மிகத் தெளிவான, துல்லியமான இசையை அளிக்கும். இதிலிருந்து வெளிப்படும் இசையின் தன்மைக்கேற்ப வண்ண விளக்குகள் எரிந்து சூழ்நிலையை மேலும் குதூகலமாக்கும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்களிலிருந்து இயக்க முடியும்.

இதில் உள்ள பேட்டரி 24 மணி நேரம் செயல்படும் வகையில் 20 ஆயிரம் ஏ.ஏ.ஹெச். திறன் கொண்டது. யு.எஸ்.பி. போர்ட் இசை சாதனங்களை இணைக்க முடியும். இது தவிர ஆங்கரின் பவர் ஐகியூ தொழில் நுட்பமும் இதில் உள்ளது. இதன் விலை சுமார் ரூ.13,499.

மேலும் செய்திகள்