புதுப் பொலிவுடன் மாருதி ஸ்விப்ட்

மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஸ்விப்ட் மாடல் கார் பெருமளவு வரவேற்பைப் பெற்ற தாகும்.

Update: 2021-03-03 17:23 GMT
இந்த மாடல் தற்போது புதுப் பொலிவுடன் பல மேம்பட்ட அம்சங்களை உள்ளடக்கியதாக வந்துள்ளது. இதில் அடுத்த தலைமுறை கே சீரிஸ் டியூயல் ஜெட் வி.வி.டி. என்ஜின் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது எரிபொருள் சிக்கனமானது. சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டருக்கு 23.20 கி.மீ. தூரம் ஓடியுள்ளது. இரட்டை வண்ணங்களைக் கொண்ட ஹேட்ச்பேக் மாடலாக இது வந்துள்ளது.

இதில் குரூயிஸ் கண்ட்ரோல், ஸ்டார்ட்-ஸ்டாப் வசதி, ரியர் வியூ மிரரை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, 10.67 செ.மீ. டி.எப்.டி. திரை ஆகியவற்றுடன் 17.78 செ.மீ. அளவிலான இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு அம்சமாக இதில் ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ்., ஹில் ஹோல்ட் ஆகியன உள்ளன.

முன்புறம் இரண்டு ஏர் பேக்குகள் உள்ளன. சீட் பெல்ட் ரிமைண்டர், ஐசோபிக்ஸ் வசதி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் வசதி, ரியர்வியூ கேமரா உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதில் 5 வேரியன்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.5.73 லட்சத்தில் ஆரம்பமாகிறது. பிரீமியம் மாடலின் விலை சுமார் ரூ.8.41 லட்சம்.

மேலும் செய்திகள்