சிறிய சிலந்திகள்

சிலந்தி சுமார் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து வாழ்ந்து வருகிறது. 42 ஆயிரம் சிறிய சிலந்தி பூச்சி வகைகள் உலகில் உள்ளன.

Update: 2021-04-26 11:26 GMT
 சிலந்தியின் வாயில் இருந்து வரும் எச்சிலில் இருந்து வலை பின்னப்படுகிறது. இந்த வலையில் வந்து விழும் பூச்சிகளை தான் சிலந்திகள் உணவாக உட்கொள்ளும். சிலந்திகளில் அதிகமாக வேட்டையாடுவது பெண் சிலந்திகள் தான்.

அளவை பொறுத்தவரை வேறு வேறு தன்மை கொண்ட சிலந்திகள் காணப்படுகின்றன. கொலம்பியா நாட்டில் காணப்படும் மிகச்சிறிய கட்டு டிகுவா என்ற சிலந்தியின் நீளம் 3.37 மில்லி மீட்டர் ஆகும். மிகப்பெரிய டரன்டுலாஸ் என்ற சிலந்தியின் உடலமைப்பானது 90 மில்லி மீட்டர் அளவும், கால் அளவானது 250 மில்லி மீட்டர் நீளமும் காணப்படுகிறது. மிக்காரியா சொசியாபிலிஸ் இனத்தை சேர்ந்த ஆண் சிலந்திகள் பெரிய பெண் சிலந்திகளை மட்டும் உணவாக எடுத்து கொள்ளும் என செக் குடியரசின் மசாரை பல்கலைக்கழகத்தின் லென்கா செண்டன்ஸ்காவின் ஆய்வும் சொல்கிறது. அளவில் சிறியதாக இருந்தாலும் காடுகளில் பல மீட்டர் நீளம் கொண்ட வலையை பின்னும் தன்மை சிலந்திகளுக்கு உண்டு.

ஓர் இடத்தில் சிலந்தி வலை பின்ன ஆரம்பித்து விட்டால் அதற்கு எத்தனை இடையூறுகள் வந்தாலும், மீண்டும் மீண்டும் வலையை பின்னிக் கொண்டே இருக்கும். சிலந்தியை தான் கம்போடியா மக்கள் உணவாக உட்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்