சிஸ்கா பவர் பேங்க்

சிஸ்கா நிறுவனம் 10 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2021-08-25 08:46 GMT
மின்னணு சாதனங்களுக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் சிஸ்கா நிறுவனம் 10 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது. மத்திய அரசின் சுய சார்பு பொருளாதார கொள்கையான ஆத்மநிர்பாரத் அடிப்படையில் இது முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரானதாகும். இதன் விலை சுமார் ரூ.1,599.

நீலம், சிவப்பு, வெள்ளை, கருப்பு உள்ளிட்ட நிறங்களில் இது கிடைக்கும். 217 கிராம் எடை கொண்டது. பேட்டரி அளவை உணர்த்தும் எல்.இ.டி இண்டி கேட்டரும் உள்ளது. மின் ஏற்றத்தாழ்வால் பாதிக்காத வகையில் சிப் தொழில்நுட்பம் இதில் உள்ளது. அதேபோல அதிகம் சூடேறாத வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் ஐ-போன், ஐ-பாட், ஸ்மார்ட்போன், எம்.பி 3 மற்றும் புளூடூத் சாதனங்களையும் சார்ஜ் செய்ய முடியும்.

மேலும் செய்திகள்