வித்தியாசமான பவளப் பாறைகள்

இந்த பிரபஞ்சத்தின் பெரும்பாலான பகுதி, கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. அதில் மீன்களைத் தவிர, வித்தியாசமான எண்ணற்ற உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

Update: 2021-09-06 08:26 GMT
இந்த பிரபஞ்சத்தின் பெரும்பாலான பகுதி, கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. அதில் மீன்களைத் தவிர, வித்தியாசமான எண்ணற்ற உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

பவள பாறைகள் பாறை என்று சொல்லப்பட்டாலும், இதற்கும் உயிர் உண்டு. இவை நுண்ணுயிரிகளை உண்டு வாழ்கின்றன. பவள பாறையானது, கடினத்தன்மை, மிருதுவானவை என்று இருவேறு வகைகளில் காணப்படுகின்றன. கடினமானவை பாறைகள் போன்றும், மிருதுவானவை செடி, கொடிகளைப் போன்றும் இருக்கும். பவளப் பாறைகள், சுண்ணாம்புக் கற்களால் ஆன உயிரினம். இவற்றின் உள்ளே பாலிப்ஸ் என்ற பகுதி உள்ளது. இதுதான், பவளப்பாறையின் ஆன்மா போன்றது. இது இறந்து விட்டால், பவள பாறையும் இறந்து போய்விடும். பாலிப்ஸ் தான், கடலில் உள்ள சுண்ணாம்பை எடுத்துக்கொண்டு பவள பாறைகளுக்கு கடினத் தன்மையையும், பலவிதமான தோற்றத்தையும் தருகின்றன.

கடல் இருக்கும் எல்லா இடங்களிலும் பவளப்பாறைகள் காணப்பட்டாலும், இந்தியாவில் மட்டும் 200 வகையான பவள பாறைகள் இருக்கின்றன. இந்தப் பவள பாறைகள், பல உயிரினங்களுக்கு புகலிடமாக உள்ளன. பலவிதமான கண்ணைக் கவரும் மீன்கள், பாசி வகைகள்,பாலூட்டிகள், ஒட்டு உயிரினங்கள், முள் தோல் விலங்குகள் போன்றவை பவளப்பாறைகளை இருப்பிடமாகக் கொண்டுள்ளன. பவளப்பாறைகள் உறைவிடமாக மட்டுமின்றி, பல கடல் உயிரினங்களின் உணவிடமாகவும் இருக்கிறது.

கடலோரப் பகுதிகளை மண் அரிப்பில் இருந்து பாதுகாக்கும் பணியையும், இந்தப் பவள பாறைகள் செய்கின்றன. வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவைக் குறைத்து, சுற்றுப்புறச்சூழலை மேம்படுத்துவதிலும், இவற்றின் பங்கு அதிகம்.

மேலும் செய்திகள்