டி.வி.எஸ். ‘ரைடர்’ மோட்டார் சைக்கிள்

டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் இளம் வயதுப் பிரிவினரைக் கவரும் வகையில் புதிய மாடல் மோட்டார் சைக்கிளை ‘ரைடர்’ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

Update: 2021-09-22 11:37 GMT
சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்டு இந்த மோட்டார் சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 3 வி என்ஜின் உள்ளது. மேலும் டி.வி.எஸ். நிறுவனத்தின் இன்டெலி கோ நுட்பம் இடம் பெற்றுள்ளது. டி.எப்.டி. கிளஸ்டர், புளூடூத் இணைப்பு, குரல்வழி மூலம் செயல்பாடு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டது.

இது 125 சி.சி. திறன் கொண்டது. எல்.சி.டி. டிஜிட்டல் ஸ்பீடா மீட்டர், 5 அங்குல திரை, இருக்கைக்கு அடியில் பொருட்கள் வைக்க இடவசதி உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன. மோனோ ஷாக் அப்சார்பர், அகலமான இருக்கை வசதி உள்ளிட்டவை இதன் சிறப்பம்சமாகும். சைடு ஸ்டாண்டு இன்டிகேட்டர் உள்ளது. அதேபோல ஹெல்மெட் அணிவதை அறிவுறுத்தும் வசதி உள்ளது. ஏர் மற்றும் ஆயில் கூல்டு என்ஜின் 8.37 கிலோவாட் திறனை 7,500 ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப் படுத்தும். 11.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை 6 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் வெளியாகும்.

இதை ஸ்டார்ட் செய்து 5.9 விநாடிகளில் 60 கி.மீ. வேகத்தைத் தொட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 99 கி.மீ. ஆகும். 5 கியர்களைக் கொண்டது. சஸ்பென்ஷனை அட்ஜெஸ்ட் செய்ய முடியும்.

மேலும் செய்திகள்