வேதிவால் குருவி

ஆசியாவை தாயகமாகக் கொண்ட பறவை இனங்களில் ஒன்றாக இருக்கிறது, ‘வேதிவால் குருவி.’ இதனை ஆங்கிலத்தில் ‘Indian Paradise Flycatcher’ என்று அழைப்பார்கள்.

Update: 2021-11-29 18:18 GMT
ஆசியாவை தாயகமாகக் கொண்ட பறவை இனங்களில் ஒன்றாக இருக்கிறது, ‘வேதிவால் குருவி.’ இதனை ஆங்கிலத்தில் ‘Indian Paradise Flycatcher’ என்று அழைப்பார்கள். கிராமப்புறங்களில் இந்தப் பறவைக்கு ‘அரசவால் ஈப்பிடிப்பான்’ என்று பெயர். பறக்கும் பூச்சி இனங்களை மட்டுமே அதிகமாக தன்னுடைய உணவாக உட்கொள்ளும் பறவைகளை ‘ஈப்பிடிப்பான்’ என்று கூறுவார்கள். இதில் பல்வேறு இனங்கள் இருந்தாலும், அவற்றில் இருந்து தன்னுடைய நீளமான வாலின் காரணமாக இந்த வேதிவால் குருவி வித்தியாசப்படுகிறது.

அடர்த்தியான மரங்களின் மேல் அமர்ந்து கொண்டு, அதன் கீழே பறக்கும் பூச்சிகளை பிடித்து உண்ணும். இவை மத்திய பிரதேச மாநிலத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தப் பறவை இனத்தில் ஆண் பறவைக்குத்தான் மிக நீளமான வால் இருக்கும். பெண் பறவையின் வால், நீளம் குறைவாக காணப்படும். இதை வைத்துதான், ஆண்- பெண் இனத்தைக் கணிக்கிறார்கள்.

இந்தப் பறவை தலை முழுவதும் கருப்பு நிறத்துடனும், உடல் முழுவதும் கருப்பு கலந்த செந்நிறத்துடன் இருக்கும். அதே போல் தலை முழுவதும் கருப்பு நிறத்துடனும், உடல் முழுவதும் கருப்பு கலந்த வெண்மை நிறத்துடனும் இருக்கும். இப்படி இரண்டு வேறு வேறு நிறங்களுடன் காணப்படும் இந்தப் பறவை உண்மையிலேயே ஒரு வித்தியாசமான பறவைதான். இவை கூடு கட்டி, இனப்பெருக்கம் செய்கின்றன.

மேலும் செய்திகள்