சிட்டுக்குருவி ‘திருமண அழைப்பிதழ்’

திருமணத்திற்காக அச்சடிக்கப்படும் அழைப்பிதழ்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வித்தியாசமாக அமைந்திருக்க வேண்டும் என்பது பலருடைய விருப்பமாக இருக்கிறது.

Update: 2021-12-05 11:56 GMT
அந்த வகையில் குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தை சேர்ந்த சிவபாய் ரவ்ஜிபாய் கோஹில் என்பவர் தனித்துவமான அழைப்பிதழை வடிவமைத்துள்ளார். அவருடைய மகன் - மகள் இருவருக்கும் ஒரே சமயத்தில் திருமணம் நடத்தி முடிக்க முடிவு செய்தார்.

அந்த இரு நிகழ்வையும் அனைவரும் நினைவு கூர வேண்டும் என்று கோஹில் விரும்பினார். திருமண அழைப்பிதழ் குப்பையில் வீசப்படாமல் பயனுள்ள வகையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் அவரது எண்ணமாக இருந்தது. நீண்ட யோசனைக்கு பிறகு சிட்டு குருவி கூடு வடிவில் அழைப்பிதழுக்கு புது உருவம் கொடுத்துவிட்டார்.

கோஹில் பறவைகள் மீது பிரியம் கொண்டவர். அவரது குடும்பத்தினருக்கும் பறவைகள் மீது நேசம் உண்டு. வீட்டில் பறவை கூடுகளை அமைத்து பராமரிக்கிறார்கள்.

‘‘திருமணம் முடிந்ததும் அழைப்பிதழ்கள் குப்பையில் தூக்கி எறியப்படுவதற்கு பதிலாக, பயனுள்ள வகையில் கூடுகளாக மாறும் என்று எதிர்பார்க்கிறோம். சிலர் தங்கள் வீடுகளில் பறவை கூடுகள் வைத்திருக்கிறார்கள். எங்கள் பிள்ளைகளின் திருமண அழைப்பிதழ் வடிவில் வழங்கும் கூடுகள் என்றென்றும் நினைவில் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்றும் சொல்கிறார்.

மேலும் செய்திகள்