ஆஸ்திரேலியா போண்டி கடற்கரை - பென்சில் சிற்பம்

உலகளவில் புகழ்பெற்ற நூற்றுக்கணக்கான கலைஞர்கள் தங்களின் படைப்புகளைக் ஆஸ்திரேலியாவின் கடற்கரை போண்டியில் காட்சிக்கு வைக்கின்றனர்.;

Update:2023-03-19 14:50 IST

ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் இருக்கும் பிரபலமான கடற்கரை போண்டி. அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்துபோகும் ஓர் இடம் இது. 1997-ம் வருடத்தில் இருந்து ஒவ்வொரு வசந்த காலத்திலும் சிற்பத் திருவிழா பிரமாண்டமாக இங்கு அரங்கேறுகிறது.

உலகளவில் புகழ்பெற்ற நூற்றுக்கணக்கான கலைஞர்கள் தங்களின் படைப்புகளைக் காட்சிக்கு வைக்கின்றனர். யார் வேண்டுமானாலும் இத்திருவிழாவில் கலந்துகொண்டு சிற்பங்களை வைக்கலாம், பார்வையிடலாம். இதற்கு கட்டணம் கிடையாது.

அந்தவகையில் பிரேசிலைச் சேர்ந்த கலைஞர் ஜெரால்டோ ராட்சத பென்சில் சிற்பத்தை காட்சிப்படுத்தியதோடு, அதை கடற்கரை பரப்பிலேயே விட்டு சென்றுவிட்டார். அது இன்றும், அங்கு கலைநயமாக, கம்பீரமாக நிற்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்