மின்சாரத்தில் தயாராகும் உணவு
மின்சார உணவு, விவசாயமே இல்லாத பாலைவனம் உள்ளிட்ட இடங்களில் மக்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.;
மின்சாரத்தை தொட்டால் ஷாக் அடிக்கும் என தெரியும். ஆனால் ருசியான உணவும் கிடைக் கும் என்கிறார்கள் பின்லாந்தைச் சேர்ந்த லாப்பீன்ரன்டா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் வி.டி.டி. தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள்.
தேவையான அளவு மின்சாரம், தேவையான அளவு நீர், சிறிது கார்பன்டை ஆக்சைடு, கொஞ்சம் நுண்ணுயிரிகள்... இவை அனைத்தையும் பயோ ரியாக்டரில் கொட்டினால் சில நிமிடங்களில் பவுடர் உணவு (50 சதவிகிதம், புரதம் 25 சதவிகிதம், கார்போஹைட்ரேட்) கிடைக்கும். அதில் நுண்ணுயிரிகள் தன்மையை மாற்றினால் உணவு ரெடி.
"நாங்கள் தற்போது ரியாக்டர், டெக்னாலஜி ஆகியவற்றை அப்டேட் செய்துவருகிறோம்" என பெருமிதமாகிறார் ஆராய்ச்சி தலைவரான ஜூகா பெக்கா பிட்கானன்.
இந்த மின்சார உணவு, விவசாயமே இல்லாத பாலைவனம் உள்ளிட்ட இடங்களில் மக்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. மூலப்பொருட்கள் எக்கச்சக்கம் தேவை என்பதால் வியாபார ரீதியில் உணவாக பத்து ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.