ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பிளாக் எடிஷன்

ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் மோட்டார் சைக்கிளில் பிளாக் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.;

Update:2022-08-05 17:32 IST

இரு சக்கர வாகனத் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஹீரோ நிறுவனத் தயாரிப்பில் ஸ்பிளெண்டர் மாடல் மோட்டார் சைக்கிள் மிகவும் பிரபலமானது. எரிபொருள் சிக்கனமானது என்பதால் இது பெருமளவு வரவேற்பைப் பெற்றது. இந்த மாடலில் சூப்பர் ஸ்பிளெண்டர் மோட்டார் சைக்கிளில் பிளாக் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் டிஜிட்டல் அனலாக் கிளஸ்டர் இடம்பெற்றுள்ளது. மேலும் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய வசதியாக சார்ஜிங் வசதியும் உள்ளது. சைடு ஸ்டாண்டு போடப்பட்டிருந்தால் என்ஜின் ஸ்டார்ட் ஆகாது. டிஸ்க் பிரேக் வசதியோடு ஒருங்கிணைந்த பிரேக்கிங் வசதி கொண்டதாக வந்துள்ளது.

இது 125 சி.சி. திறன் கொண்ட, ஏர் கூல்டு, 4 ஸ்டிரோக் என்ஜினைக் கொண்டது. இது 10.7 பி.ஹெச்.பி. திறனை 7,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 10.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையை 6,000 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். 5 கியர்களைக் கொண்டதாக வந்துள்ளது.

பியூயல் இன்ஜெக்‌ஷன் நுட்பம் உள்ளதால் எரிபொருள் சிக்கனமானது. டிரம் மாடல் விலை சுமார் ரூ.77,430. டிஸ்க் பிரேக் மாடல் விலை சுமார் ரூ.81,330. முன்புறம் டெலஸ்கோப்பிக் போர்க் மற்றும் பின்புறம் 5 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான ஷாக் அப்சார்பர் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்