எல்.ஜி. சினி பீம் புரொஜெக்டர்

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் கொரியாவின் எல்.ஜி. நிறுவனம், வீட்டிலிருந்து சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக காண வசதியாக சினி பீம் புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2022-06-02 21:38 IST

இது 4-கே ரெசல்யூஷனை வெளிப்படுத்தும் லேசர் புரொஜெக்டராகும். சுவரிலிருந்து 5.6 செ.மீ. தூரத்திலிருந்து 90 அங்குல திரை அளவுக்கு படங்களை பார்க்க முடியும். 18.3 செ.மீ தூரம் நகர்த்தினால் 120 அங்குல அளவுக்கு காட்சிகளைக் கண்டு ரசிக்க முடியும்.

ஸ்ட்ரீமிங் சேவை மூலம் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ், யூ டியூப், ஆப்பிள் டி.வி. உள்ளிட்டவற்றின் மூலம் விருப்பமான காட்சிகளை பெரிய திரையில் பார்த்து ரசிக்கலாம். ஸ்கிரீன் மிரரிங், ஆப்பிள் ஏர் பிளே 2 மற்றும் புளூடூத் இணைப்பு வசதிகளைக் கொண்டது. 40 வாட் ஸ்பீக்கர் சிஸ்டம் திரையரங்கில் காட்சிகளைப் பார்ப்பது போன்ற அனுபவத்தை அளிக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்