பிலிப்ஸ் ஆம்பிலைட் ஆண்ட்ராய்டு டி.வி.
வீட்டு உபயோக மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் பிலிப்ஸ் நிறுவனம் அல்ட்ரா ஹெச்.டி. எல்.இ.டி. ஆண்ட்ராய்டு டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது.;
இதில் திரையின் பின்புறம் மூன்று பக்கங்களிலிருந்தும் எல்.இ.டி. விளக்கு வெளிச்சம் திரைக்கு வரும். இதனால் திரையில் வித்தியாசமான வண்ணத்தில் காட்சிகளை ரசிக்க முடியும். பிலிப்ஸ் 7900 ஆம்பிலைட் அல்ட்ரா ஹெச்.டி. எல்.இ.டி. டி.வி.க்கள் மூன்று அளவுகளில் 55 அங்குலம் (விலை சுமார் ரூ.99990) 65 அங்குலம் (சுமார் ரூ.149990) மற்றும் 75 அங்குல (சுமார் ரூ.189990) அளவுகளில் கிடைக்கும்.
டால்பி விஷன் ஹெச்.டி.ஆர் 10 பிளஸ் ஹெச்.டி.ஆர் 10 மற்றும் ஹெச்.எல்.ஜி. நுட்பங்களைக் கொண்டது. கூகுள் அசிஸ்டென்ட் மூலமும் இயங்கக் கூடியது. இதில் உள்ளீடாக கூகுள் குரோம்காஸ்ட் உள்ளது.