மரங்கொத்தி உணவு சேமிப்பு

நீங்கள் இங்கே பார்க்கும் பறவை, மரங்கொத்தி பறவை இனங்களில் ஒன்று. இது தன்னுடைய குளிர்காலத் தேவைக்கான உணவை ேசமிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.;

Update:2022-07-12 21:20 IST

இவ்வகை பறவைகள், வளர்ச்சி நிலையில் இல்லாத மரங்களை முதலில் தேர்வு செய்யும். பின்னர் அந்த மரத்தில் தன்னுடைய அலகால், சிறுசிறு துளைகளை உருவாக்கும். அந்த ஒவ்வொரு துளைக்குள்ளும் ஒரு குறிப்பிட்ட பருப்பு வகையை புகுத்தி வைக்கும். பருப்பின் அளவு சிறியதாக இருந்து, துளை பெரியதாக இருந்தால், மற்ற பறவைகளால் அந்த பருப்புகள் எளிதாக திருடப்பட வாய்ப்பிருக்கிறது. அதுவே துளை சிறியதாக இருந்தால், அதில் சிக்கியிருக்கும் பருப்புகள் நொறுங்கிப் போய்விடலாம். எனவே தான் சேகரிக்கும் ஒவ்வொரு பருப்புகளின் அளவும் சரியாக பொருந்திப்போகும் வகையிலான துளை களையே அந்த மரங்கொத்தி பறவை ஏற்படுத்தும். அப்படி ஒரு மரங்கொத்திப் பறவை, ஒரு மரத்தின் தண்டுப் பகுதியில் சேகரித்து வைத்திருக்கும் பருப்புவகை களைத்தான் இங்கே பார்க்கிறீர்கள். அது பார்ப்பதற்கு மரத்தை அலங்காரம் செய்தது போல் காட்சியளிக்கிறது. ஒரு பெரிய மரத்தின் தண்டில், சுமார் 50 ஆயிரம் பருப்புகள் வரை மரங்கொத்திப் பறவையால் சேகரித்து வைக்க இயலும். இந்த சேமிப்புதான், அது குளிர்காலத்தில், மரத்தில் ஒரு பொந்து அமைத்து, தன் உணவுத் தேவைக்கு வேறு எங்கும் செல்லாத திருப்திகரமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்