தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு டாக்டர் தற்கொலை
Doctor commits suicide by taking sleeping pills;
சரவணம்பட்டி
நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் விருப்பம் இல்லாததால் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு கோவை தனியார் மருத்துவமனை டாக்டர் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
டாக்டர்
கர்நாடகா மாநிலம் சிமோகா பகுதியைச் சேர்ந்தவர் மாருதி. இவரது மகன் டாக்டர் கவின் (வயழ31). இவர் கோவை காளப்பட்டி அசோக் நகர் பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்து கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் இவருக்கு வருகின்ற ஜனவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த திருமணத்தில் கவினுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.
தற்கொலை
இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கவின், தான் தங்கி இருந்த அறையில் ரத்த அழுத்த மாத்திரை மற்றும் தூக்க மாத்திரைகளை அதிகளவில் சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்த அவருடன் தங்கி இருந்த மற்றொரு டாக்டர் கவினை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் கவின் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலைஉயிரிழந்தார். இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-----------