100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்

பூதலூர் அருகே ஊதியம் வழங்கக்கோரி 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-14 20:27 GMT

திருக்காட்டுப்பள்ளி:

பூதலூர் அருகே ஊதியம் வழங்கக்கோரி 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

பூதலூர் -செங்கிப்பட்டி சாலையில் புதுப்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஊதியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை எனக்கூறி நேற்று காலை திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முறையாக ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து பூதலூர் தாசில்தார் பெர்ஷியா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வேலை செய்த நாட்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிததனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து மறியலை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் பூதலூர் - செங்கிப்பட்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்