வாலீஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
வாலீஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது.;
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற வாலீஸ்வரர் கோவிலில் நேற்று கார்த்திகை மாத கடைசி சோம வாரத்தை முன்னிட்டு 1,008 சங்காபிஷேக பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.