குரோம்பேட்டையில் 102 வயதான சங்கரய்யா தேசிய கொடி ஏற்றினார்

குரோம்பேட்டையில் 102 வயதான சங்கரய்யா தேசிய கொடி ஏற்றினார்.;

Update:2022-08-16 10:47 IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான 102 வயதான சங்கரய்யா, சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் வசித்து வருகிறார்.

75-வது சுதந்திர தினவிழாவையொட்டி குரோம்பேட்டை நியூ காலனியில் உள்ள அவரது வீட்டு அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சங்கரய்யா, தேசிய கொடி ஏற்றினார்.

பின்னர் பள்ளி மாணவிகள் ஊர்வலமாக வந்து சங்கரய்யாவுக்கு தேசியகொடி மற்றும் பூக்கள் கொடுத்து காலில் விழுந்து வணங்கினர். அப்போது மாணவி ஒருவர் சுதந்திர போராட்டத்தில் சங்கரய்யாவின் பங்கு குறித்து பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்