சித்தாலப்பாக்கத்தில் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை - தந்தை திட்டியதால் விரக்தி

தந்தை திட்டியதால் ஏற்பட்ட விரக்தியில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-12-10 06:15 GMT

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் முருகன். இவர், சாலையோர கடையில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் சுதீப் (வயது 15). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில்10-ம் வகுப்பு படித்துவந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனுடன் ஏற்பட்ட தகராறில் அவருடைய மனைவி, கோபித்து கொண்டு தன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். முருகனும், அவரது மகனும் மட்டும் வீட்டில் இருந்தனர்.

முருகனும் சரிவர வேலைக்கு செல்லாமல் குடிபோதையில் வீட்டிலேயே இருந்து உள்ளார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து தாமதமாக வீட்டுக்கு வந்த சுதீப்பிடம், 'நான் சரியாக படிக்காததால் பரோட்டா மாஸ்டராக வேலை செய்கிறேன். நீயாவது படித்து முன்னுக்கு வா. கண்டபடி ஊர் சுற்றாதே?' என கூறி மகனை முருகன் கண்டித்ததாக கூறப்படுகிறது.இதனால் விரக்தி அடைந்த சுதீப், வீட்டுக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்டநேரம் ஆகியும் சுதீப் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த முருகன், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது தனது மகன் தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி பெரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்