ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமைக்கப் பாடுபட்டவர் அம்பேத்கர்: அண்ணாமலை
சமூக நீதி, சமத்துவம், ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமைக்கப் பாடுபட்டவர் அம்பேத்கர் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்;
சென்னை,
தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தலைசிறந்த தேசியவாதியும், சமூக நீதிக்கான புரட்சியை முன்னெடுத்துச் சென்றவருமான, பாபா சாகேப், டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம் இன்று.
மிகச் சிறந்த கல்வியாளராகவும், பொருளாதார நிபுணராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பியாகவும் விளங்கியவர். ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கு அடித்தளம் இட்ட மாமனிதர். சமூக நீதி, சமத்துவம், ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமைக்கப் பாடுபட்ட அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தி வணங்குகிறோம்.என தெரிவித்துள்ளார்.