ஈத்தாமொழி அருகே காரில் கடத்த முயன்ற 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ஈத்தாமொழி அருகே காரில் கடத்த முயன்ற 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.;
நாகர்கோவில்:
குமரி மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுஷா மனோகரி தலைமையில் போலீசார் நேற்று ஈத்தாமொழி அருகே இலந்தையடிவிளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் சிறு, சிறு மூடைகளில் மொத்தம் 1,100 கிலோ ரேஷன் அாிசி பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதனைதொடர்நது காருடன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடா்பாக திருவனந்தபுரம் நல்லூர் பகுதியை சோ்ந்த கார் டிரைவர் அசோக் (வயது 31) என்பவரை கைது செய்தனர்.
---