114 வாகனங்கள் ரூ.16 லட்சத்துக்கு ஏலம்
சாராய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 114 வாகனங்கள் ரூ.16 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.;
வேலூர் மாவட்டத்தில் சாராயம் கடத்தல் மற்றும் விற்பனை ஆகிய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நேற்று ஏலம் விடப்பட்டது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆய்வு செய்தார்.
இதில் 112 இருசக்கர வாகனங்களும், 2 நான்கு சக்கர வாகனங்களும் ரூ.15 லட்சத்து 96 ஆயிரத்துக்கு ஏலம் போனது.