திமுகவில் இன்று இணையும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்...?
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.;
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழுவில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இடம்பெற்றுள்ளார்.அவர் இன்று திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ. வான வைத்திலிங்கம் இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை இன்று காலை 10.45 மணிக்கு சந்தித்து அவர் முன்னிலையில் வைத்திலிங்கம் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.