கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பேரணி: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

கனிம வளங்கள் கொள்ளை தமிழகத்தில் நடந்து வருகிறது. இது குறித்து அரசு, முதல்-அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.;

Update:2026-01-20 22:44 IST

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் பேரணி கன்னியாகுமரியில் பிப்ரவரி 7ம் தேதி துவங்கும் என்று விவசாயிகள் சங்க மூத்த தலைவர் பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் அறிவித்தனர்.

நாகர்கோவிலில் நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கூறுகையில், தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதியில் விவசாயிகள் நம்பிக்கை இழந்துள்ளனர், கனிம வளங்கள் கொள்ளை தமிழகத்தில் நடந்து வருகிறது இது குறித்து அரசு, முதல்-அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் விவசாயிகள் விளைச்சல் செய்கின்ற பயிர்களுக்கு ஆதார விலை நிர்ணயச் சட்டம் கொண்டு வர வேண்டும், விவசாய கடன்கள் ரத்து செய்ய வேண்டும், இலவச மின்சாரத்தை ரத்து செய்கின்ற வகையில் கொண்டு வரப்பட்டுள்ள ஒழுங்குமுறை ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை செல்லும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பேரணி கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் எனவும் தெரிவித்தனர். அப்போது கன்னியாகுமரி மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்